மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச இருசக்கர வாகனம் வழங்கல்

679

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சு திருநாவுக்கரசர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் 44 மாற்றுத்திறனாளிகளுக்கு மதிப்பீடு ( 33.66 )லட்சம் இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டி வழங்கிய நிகழ்வு.

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மதிப்புமிகு டாக்டர் வை முத்துராஜா அவர்களின் பரிந்துரை பெயரில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 10 மாற்றுத்திறனாளிகளுக்கும்
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு மொத்தம் 25 மாற்றுத் திறனாளிகளுக்கும் மற்றும் ஆலங்குடி அறந்தாங்கி கந்தர்வகோட்டை பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கும்.

இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சு திருநாவுக்கரசர் மற்றும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மதிப்புமிகு டாக்டர் வை.முத்துராஜா மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு திருமதி கவிதா ராமு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு உலகநாதன் ஆகியோர் முன்னிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டி இலவசமாக வழங்கியபோது.இந்நிகழ்வில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் திரு ராமச்சந்திரன் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு தோழர் சின்னதுரை மாவட்ட சேர்மன் திருமதி ஜெயலட்சுமி தமிழ்ச்செல்வன் புதுக்கோட்டை ஒன்றிய சேர்மன் திரு சின்னையா VGR மணிவண்ணன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிக்கரம் நீட்டிய திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சு திருநாவுக்கரசர் அவர்களுக்கும் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு பரிந்துரை செய்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா அவர்களுக்கும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் புதுக்கோட்டை மாவட்டம் நன்றியை தெரிவித்துள்ளது..