தமிழ்நாட்டில் மூகக்கவசம் அணியாவிடில் 500 அபராதம் – மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

343

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது

இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் பொது இடங்களில் இனி மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க உத்தவிட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலாளர்
ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

மேலும், பொது இடங்களுக்கு
செல்லும்போது பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை அவசியம்
பின்பற்ற வேண்டும்.கொரோனா அதிகரிப்பால் மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்று மத்திய அரசேகூறியுள்ளது என்றும்
கல்வி நிறுவனங்களுக்கு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது எனவும்
ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முக கவசம் அணிவது கட்டாயம் என்றும் மாஸ்க் அணிவதிலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை என்றும் சுகாதாரத்துறை
அமைச்சர் மா.சுப்ரமணியன்
தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் பொது
இடங்களில் முக கவசம் அணியாவிட்டால்
ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்று
தெரிவித்தார்.

*மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்க உத்தரவு…*

*தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்துக்கொள்ளவேண்டும் வடமாநிலங்கள் மற்றும் சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா பரவி வரும் நிலையில் மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு உத்தரவு*