தண்ணீர்! தண்ணீர்! புதுக்கோட்டை

712

சட்டப்பேரவையில் இன்று புதுக்கோட்டைக்கு புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் அறிவிப்பு

புதுக்கோட்டை நகரத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.. ஓவ்வொரு பகுதியிலும் பத்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வருகிறது.

நகரம் முழுவதும் பத்து நாட்களுக்கு ஒருமுறை இதே போன்று தான் தண்ணீர் வருகிறது. இதை கருத்தில் கொண்டு புதுக்கோட்டை சட்டமன்றத் உறுப்பினர் திரு டாக்டர் வை. முத்துராஜா அவர்கள் பல முறை கோரிக்கை விடுத்தார்

அதற்கு பலனாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் புதுக்கோட்டை நகரத்திற்கு புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் அறிவித்திருக்கிறார்

இன்று பேரவையில் கேள்வி நேரத்தில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட காமராஜபுரம் பகுதியில் உள்ள 20.000 ஆயிரம் பேர் மக்கள் தொகை கொண்ட மேடான பகுதிகளுக்கு மக்களுக்காக குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் 5 லட்சம் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்க பேரவையில் கோரிக்கை வைத்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு.டாக்டர்.வை.முத்துராஜா,MBBS அவர்கள்,

அந்தக் கோரிக்கையை ஏற்று மாண்புமிகு நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் திரு கே.என்.நேரு அவர்கள் விரைவில் விராலிமலை வழியாக புதுக்கோட்டை நகராட்சிக்கு சீரான புதிய கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் என்று பேரவையில் அறிவித்தார்.