புதுக்கோட்டை நெடுஞ்சாலை துறை கவனத்திற்கு

1508

புதுக்கோட்டை மாவட்டத்தின் தலைநகரம் ஆனால் முக்கியமாக சாலைகள் மிக குறுகிய சாலையாகவே உள்ளது. நகரத்தின் மக்கள்தொகை மற்றும் வாகன எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக இன்றளவும் நெருக்கடி மிகுந்த சாலைகள் ஆகவேதான் உள்ளது.

புதுக்கோட்டை நகரத்தில் உள்ள அனைத்து முக்கிய சாலைகளையும் அகலப்படுத்த வேண்டும் வாகன எண்ணிக்கை அதிகரித்து விட்டது

விபத்துக்கள் அதிக அளவில் நடைபெறுகிறது.
நகர சாலைகளை அரசு எப்போது அகலப்படுத்தும் என்னம் வரப்போகிறதோ!!!

புதுக்கோட்டை🔄மதுரை சாலை, புதுக்கோட்டை🔄திருச்சி சாலை
புதுக்கோட்டை🔄தஞ்சாவூர் சாலை மற்றும் புதுக்கோட்டை🔄அறந்தாங்கி சாலை இரட்டை வழிச்சாலையாக எப்போது மாறும்🤔???

புதுக்கோட்டை நகரத்தில் அதிக வாகனப் போக்குவரத்து மிக்க நெரிசலான சாலையில் தினம் தினமும் நடக்கும் சாலை விபத்துகள் அதிகளவில் நடைபெறுகிறது..விபத்துகளை குறைக்க வேண்டுமானல் சாலைகளை அகலப்படுத்தினால் மட்டுமே தீர்வு காண முடியும்.

வளர்ந்துவரும் சிறு நகரங்களில் குறிப்பாக காரைக்குடி,மணப்பறை, பேராவூரணி விராலிமலை கூட சாலைகளை அகலப்படுத்தி சென்டர் மீடியன் அமைத்து இரு வழிச்சாலையாக அமைக்கபடுகின்றனர். . நமது நகரத்தில் அதற்கான பணிகள் நடைபெருமா என்று இரண்டு வருடத்திற்கு முன்பு நமது முகநூல் பக்கத்தில் பதிவு செய்து இருந்தோம்.. ஆனால் இன்று வரை அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை

சாலையை அகலப்படுத்தமலேயே புதிய சாலை பணிகள் ஆரம்பம்
நகரின் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் குறைக்க வேண்டும் ஆனால் முதலில் புதுக்கோட்டை நகரின் முக்கியமான அதிக போக்குவரத்து உள்ள சாலைகளை அகலப்படுத்தினால் மட்டுமே தீர்வு கிடைக்கும்

சாலை வேலை நடைபெறுவதால் பால்பண்ணை ரவுண்டானா முதல் திலகர் திடல் வரை உள்ள சாலையை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்..

புதுக்கோட்டையில் ஆக்கிரமிப்பை அகற்றி சாலையின் அகலத்தை அதிகரித்தால் மட்டுமே இதற்கு தீர்வு புதுக்கோட்டை நெடுஞ்சாலைத்துறை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில்.. செயல்பாடுத்த போவது எப்போது என்று புதுக்கோட்டை நகர மக்களின் எதிர்பார்ப்பு😌😲🤔