ஆர்.பாலக்குறிச்சி முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் ஆயிரக்கணக்கானோர் இருபுறமும் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆர்.பாலகுறிச்சி முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவெகு விமரிசையாக இன்று நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஆர்.பாலக்குறிச்சி கிராமத்தில்
முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா அதி விமரிசையாக நடைபெற்றது காலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் மாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்து மாரியம்மன்க்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்து தேரோட்டம் நடைபெற்றது.15நாட்களுக்கு முன்பு காப்புக் கட்டுடன் தொடங்கி திருவிழா தொடர்ந்து ஒவ்வொரு நாள் மண்டகப்படியுடன் நடந்தது.
அதனைத்தொடர்ந்து தேர்த்திருவிழா நடத்தபட்டு்
தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நான்கு தாட வீதிகள் வழிய வடம்பிடித்து கோயிலைச்சுற்றி கழுத்து வரப்பட்டு தேர் நிலைநிறுத்தபட்டது.இதில் ரெகுநாதபட்டி,வெடத்தலாம்பட்டிஉலகம்பட்டி,பொன்னடப்பட்டி,எஸ்.புதூர் உள்ளிட்ட ஊர்களைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.