கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களில் அதிகமாக முடி வளர்த்து வரும் மாணவர்களை இனம் கண்டு அவர்களுக்கு இலவசமாக முடிதிருத்தம் செய்யவைத்து அவர்களுக்கு உரிய அறிவுரையை வழங்கி காவல் ஆய்வாளர் செந்தில் மாறன் மற்றும் காவல்துறையினர் விழிப்பணர்வு ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து பள்ளியில் காவல்துறையின் மூலம் மாணவர்கள் ஒழுக்க கட்டுப்பாட்டை கடைபிடிப்பது குறித்து சாதி அடையாளங்கள் கொண்ட கயிறுகள் உள்ளிட்டவற்றை கட்டக்கூடாது என்பது குறித்தும் கடுக்கண் உள்ளிட்ட இதர பொருட்களை அணிந்து வருவது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது உள்ளிட்டவை சட்ட விதிக்கு முரணானவை என்றும் அதனை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்,
தொடர்ந்து பேசிய பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேல்,
காவல்துறை மற்றும் கல்வித் துறை இணைந்து மாணவர்களின் பள்ளி செயல்பாடுகள் மற்றும் பள்ளிக்கு வெளியே நடக்கும் செயல்பாடுகள் குறித்து உரிய கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதால் மாணவர்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் .
காவல்துறையின் இந்த செயல்பாடு பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது..