ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, `நீரின்றி அமையாது உலகு’ என்று தண்ணீரின் முக்கியத்துவத்தை ஒரே வரியில் விளக்கியுள்ளார் திருவள்ளுவர். தற்போதைய சூழல் தண்ணீரின் முக்கியத்துவத்தை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. தண்ணீருக்காக சென்னை மக்கள் படும்பாடு நாமெல்லாம் அறிந்ததுதான். எனவேதான், தண்ணீர் சிக்கனமும், சேமிப்பும் மிக மிக அவசியமானதாகியுள்ளது.
நாம் வாழும் இந்த பூமியில் 79 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது. ஆனால், இதில் 97.50 சதவீதம் கடல்நீர்தான். மீதமுள்ள 2.5 சதவீதம் நன்னீராகவும், மூன்றில் ஒரு பங்கு, பனிக்கட்டிகளாகவும் உள்ளன. எனவே, மிக சொற்ப அளவிலான தண்ணீரை நமக்கு கிடைக்கிறது. இதனால், பெருமளவு மழையை மட்டுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது. பெருகி வரும் மக்கள் தொகை, வேகமாய் வளரும் தொழில் துறை உள்ளிட்ட காரணங்களால் தண்ணீர் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதேசமயம், மழைப்பொழிவு குறைவால் குறைந்த அளவு தண்ணீரே கிடைக்கிறது. நிலத்தடி நீர்மட்டமும் வறண்டு, பல பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது. பல நாடுகளில் குடிப்பதற்குக்கூட தண்ணீர் இல்லாமல் மக்கள் பரிதவிக்கின்றனர். இந்த நிலை தொடருமானால் தங்கத்தைக் காட்டிலும், தண்ணீரின் மதிப்பு அதிகரித்துவிடும்.
எனவே, மரங்கள் வளர்ப்பு மூலம் நீராதாரத்தை அதிகரிப்பது, மழை நீரை சேகரிப்பது, நீரின் உபயோகத்தைக் குறைத்துக் கொள்வது, மறுசுழற்சி முறையில் நீரை மீண்டும் பயன்படுத்துவது என தண்ணீரை சிக்கனப்படுத்தவும், சேமிக்கவும் எல்லா வழிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
உலக_தண்ணீர்தினம் மார்ச் 22
உலக வாழ்வாதாரத்திற்கான அடிப்படை அலகு தண்ணீர். மக்கள் தொகை பெருக பெருக தண்ணீர் பற்றாக்குறை அதிகமாகி கொண்டே இருக்கிறது. மூன்றாம் உலகப் போர் தண்ணீருக்கானது என்று சூழலியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துக் கொண்டு இருக்கின்றனர். 2050-ல் உலக மக்கள் தொகையில் மிகப் பெரிய அளவில் மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. மஹாராஷ்டிரா மாநிலத்தில் லத்தூர் மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் ஏற்படும் கலவரத்தை தடுக்க 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
அங்கு உள்ள நீர் நிலைகளில் மக்கள் ஒன்று சேரக்கூடாது என்று தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் நமக்கு பதற்றத்தை ஏற்படுத்துகின்றன. விரைவில் தண்ணீரை மையப்படுத்தி கலவரங்களும் பிரச்சினைகளையும் சந்திக்கப்போகிறோம் என்பது மட்டும் கண்ணுக்குத் தெரிந்த உண்மை. இதனைத் தடுக்க அரசு துரிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தண்ணீரை சேமிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நீண்ட கால அடிப்படையிலான துரித நடவடிக்கைகள் மட்டுமே இதற்கான தீர்வை தரக்கூடியதாக இருக்கும். இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை பற்றிய சில தகவல்கள்….
நிலத்தடி நீர் மட்ட அளவில் அபாயகரத்தில் இருக்கும் இந்திய மாநிலங்கள்
🚱 பஞ்சாப்
🚱 ராஜஸ்தான்
🚱 ஹரியாணா
🚱 டெல்லி
🚱 கர்நாடகா
🚱 தமிழ்நாடு
🚱 உத்தரப்பிரதேசம்
🚱 ஆந்திரப்பிரதேசம்
🚱 தெலங்கானா
சர்வதேச அளவில் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத பிற நாடுகளின் பட்டியல்…
👉 இந்தியா 7,57,77,797
👉 சீனா 6,31,66,533
👉 நைஜிரீயா 5,77,57,141
👉 எத்தியோப்பியா 4,22,51,031
👉 காங்கோ 3,39,06,771
🌍 உலக மக்கள் தொகையில் 18% மக்கள் தொகையை கொண்ட நாடு இந்தியா. ஆனால் இந்தியாவில் பயன்படுத்தக் கூடிய அளவிற்கு உள்ள தண்ணீர் 4% மட்டுமே.
💧 பூமியில் உள்ள மொத்த 71% நீர்பரப்பில் 2.5% மட்டுமே தூய்மையான நீர்.
💵 இந்தியர்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் 17% தண்ணீருக்காக செலவிடுகிறார்கள்
🌊 இந்தியாவின் மொத்த ஆற்று நீரில் 36% தண்ணீர் கங்கை நதி மூலமாக பெறப்படுகிறது.
💨 தற்போது கங்கை நதி முழுவதும் மாசுபட்டுள்ளது. இந்த மாசுபாட்டை குறைப்பதற்காக மத்திய அரசு நமாமி கங்கை திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
❄ 90% நதி நீர் மோசமான சூழலியல் கொள்கைகள் மூலமாகதான் மாசடைகிறது.
🦑 இந்தியாவில் வருடத்திற்கு நீரினால் பரவக்கூடிய மலேரியா நோய் காரணமாக 1.4 லட்சம் சிறார்கள் இறக்கின்றனர்.
🌪 ஒவ்வொரு வருடமும் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு 1123 பில்லியன் கியூபிக் மீட்டர். இதில் 690 பில்லியன் கியூபிக் மீட்டர் அல்லது 60% தண்ணீர் ஆறுகள் மற்றும் ஏரிகள் மூலமாக பெறப்படுகிறது. மீதமுள்ள 40% தண்ணீர் நிலத்தடி நீர் மூலமாக பெறப்படுகிறது.
🚨 2025ம் ஆண்டு இந்தியாவில் 843 பில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது 2050-ம் ஆண்டில் பற்றாக்குறையின் அளவு அதிகமாகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
🏝 100% – ஹரியாணா, டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் நிலத்தடி நீர் 100 சதவீதம் பயன்படுத்தப்பட்டு விட்டது.
70% – தமிழ்நாடு, குஜராத், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் 70 சதவீத நிலத்தடி நீர் பயன்படுத்தப்பட்டு விட்டது.
95% – தற்போது தமிழ்நாட்டில் 95 சதவீத கிணறுகள் வறண்டு காணப்படுகின்றன.
32 – இந்தியாவில் 32 முக்கிய பெரிய நகரங்களில் தண்ணீர் பற்றாக்குறை இருந்துவருகிறது.
தண்ணீர் பற்றாக்குறையை தடுக்க வழிகள்
1 மழைநீரை சேமிப்பது
2 கடல் நீரை குடிநீராக்குவது
3 நதி நீரை மாசுபாடு இல்லாமல் பாதுகாப்பது
பூமியில் நிலப்பகுதி 30 சதவீதம். மீதமுள்ள 70 சதவீதம் நீர்பரப்பு தான். ஆனால் இந்த70 சதவீத நீர் பரப்பளவில் 97.5 சதவீதம் கடலில் இருக்கும் உப்பு நீர். மீதியுள்ள 2.5 சதவீத அளவிற்கே நிலத்தடிநீர் உள்ளது. இதிலும் குறி்ப்பிட்ட சதவீதம் பனிக்கட்டிகள் உள்ளன.
மீதி தண்ணீரை தான் உலக மக்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். ஆனால் உயரும் வெப்பநிலை பருவநிலை மாற்றம் காடுகளின் பரப்பளவு குறைதல், மணல் கொள்ளை, போன்ற பல்வேறு காரணங்களால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து விட்டது. மூன்றாம் உலகப்போர் என ஒன்று வந்தால் அது தண்ணீருக்காக தான் இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தண்ணீரை மிக சிக்கனமாக செலவழிக்க வேண்டும். அப்போது தான் எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீர் இருக்கும். இதை அனைவரும் மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும்.
💧ஒரு துளி அமுதுதேனீக்களுக்கு முக்கியம்
💧💧இரு துளி மருந்து போலியோ ஒழிப்பிற்கு முக்கியம்
💧💧💧மூன்று துளி உயிரணு உயிர்ப் பெருக்கத்திற்கு முக்கியம்
💧💧💧💧நான்கு துளி பன்னீர் விழா வரவேற்பிற்கு முக்கியம்
💧💧💧💧💧ஐந்து துளி கண்ணீர் தூய அன்பிற்கு முக்கியம்
💧💧💧💧💧💧ஆறு துளி விடம் பாம்பின் பாதுகாப்பிற்கு முக்கியம்
இப்படி இயற்கையோடு
இயைந்து போன துளிகளின்
ஆதியும் அந்தமும் நீரே…
உலகில் வாழும் மனிதனிலும்
மனிதன் வாழும் உலகினிலும்
உள்ளடங்கியிருப்பது எழுபத சதம் நீரே
ஒவ்வொரு துளியும் நமக்கினி உயிர் நீரே…
உலகிலுள்ளோர் இதை உணர்வீரே…
உயிர் நீரை சேமித்திடுவீரே…
வரும் தலைமுறைக்கு ‘நீர் வழி’ காட்டிடுவீரே..!
தண்ணீரை சேமிப்போம்..
*நீரின்றி அமையாது உலகு*
💧 *இன்று உலக தண்ணீர் தினம்* 💧