பேரையூர் நாகநாதசுவாமி தேர் திருவிழா

337

புதுக்கோட்டை அருகில் பேரையூர் கிராமத்தில் உள்ள நாகநாத சுவாமி உடனுறை பிரகதாம்பாள் ஆலய தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

புதுக்கோட்டை அருகே பேரையூர் கிராமத்தில் அமைந்துள்ள திருக்கோவிலின் சார்ந்த நாகநாதசுவாமி உடனுறை பிரகதாம்பாள் தேர்த்திருவிழா கடந்த ஐந்தாம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா தினந்தோறும் நாகநாதர் உடனுறை பிரகதாம்பாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வீதிஉலா நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து இன்று முக்கிய நிகழ்வான தேரோட்டம் அது விமர்சியாக நடைபெற்றது இதில் நாகநாத சுவாமி உடனுறை பிரகதாம்பாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து அலங்காரம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து பேரையூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் தேரில்அமர்ந்தவாறு நாகநாதர் சுவாமி உடனுறை பிரகதாம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.