திருச்சி புதுக்கோட்டை நான்கு வழி சாலை

1664

நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை மானிய கோரிக்கை.

நெடுஞ்சாலை துறை மானிய கோரிக்கை.

1. TNRSP – III கீழ் 400 km சாலைகள் மேம்படுத்த பட உள்ளன. இதில் நம் பகுதியில் ஒரு சாலை வர வாய்ப்பு அதிகம். விவரம் நமக்கு முழுமையாக கிடைத்தாலும் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை இப்படி சொல்வது தான் நல்லது.

2. செங்கல்பட்டு – திருச்சி – புதுக்கோட்டை – மானாமதுரை – தூத்துக்குடி இடையே நான்கு வழி சாலை அமைக்கப்படும். ( தஞ்சாவூர் புதுக்கோட்டை பிள்ளையார்பட்டி சாலை 4 வழி சாலையாக விரைவில் வரவுள்ளது) சென்னை செல்ல தென் மாவட்டங்களை இணைக்கும் சாலை யாக அமையும்.

கோவை – தூத்துக்குடி இடையே நான்கு வழி சாலை அமைக்கப்படும்.

இதில் இந்த செங்கல்பட்டு – தூத்துக்குடி திட்டம் அம்மையார் அவர்களால் vision – 2023 திட்டம் கீழ் கும்பகோணம் – அதிராம்பட்டினம் வழியாக தூத்துக்குடி செல்வதாக திட்டம் இருந்தது. அது மாற்றப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதில் நல்ல விஷயம். திருச்சி புதுக்கோட்டை இருவழி சாலை நான்கு வழி சாலை ஆக வந்தால் சாலை விபத்து குறையும்..எப்படியோ நமக்கு தூத்துக்குடி இணைப்பு சாலை கிடைக்க உள்ளது..

3. முதல் அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டம் கீழ் 180 km சாலைகள் நான்கு வழி சாலை ஆகவும், 600 km சாலைகள் இரு வழி சாலை ஆகவும் மேம்படுத்த பட உள்ளது. இதில் காரைக்கால் மற்றும் கல்லணை – பூம்புகார் சாலை இடம் பெற வேண்டும் என நம்பிக்கை உடன் இருப்போம்.

4. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பு நாமக்கல் வழி புதுக்கோட்டை சேதுபாவாசத்திரம் இருவழி சாலை அறிவிப்புகள் வரவில்லை.

5.புதுக்கோட்டை மாவட்டத்தில், ரூ.7.23கோடி மதிப்பில் புதுக்கோட்டை-ஏம்பல் கி.மீ.38/0-40/6, 41/0-42/4, இடைவழித்தடத்தை சாலை 44/0-45/660 இருவழித்தடமாக அகலப்படுத்தி மேம்படுத்துதல் பணி மற்றும் D.38/2, 39/4, 40/6, 41/2 (i), 41/2 (ii), 41/4, 41/6,45/2, 45/6, 44/2, 44/6 (i), 44/6(ii), 44/1000 சிறுபாலங்கள் புனரமைத்தல், கி.மீ.38/8 மற்றும் 38/10ல் தடுப்புச்சுவர் அமைத்தல் அனுமதி வழங்கியது மகிழ்ச்சி தரும்..

மேலும் புறவழி சாலை விவரங்களில் இரு மகிழ்ச்சி ஆன செய்தி உள்ளது.

ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி புறவழி சாலை சாலை விரிவாக்கம் திட்டம் கீழ் புறவழி சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இந்த புறவழி சாலை வந்தால் இனி நகருக்குள் செல்லும் நிலை இருக்காது.

6. மிகவும் முக்கியமான திருவப்பூர் இரயில்வே மேம்பாலம் குறித்து எந்த தகவலும் இல்லை.

பொதுப்பணி துறை மானிய கோரிக்கை.
புதுக்கோட்டை நகர மக்களுக்கு ஏமாற்றம் மட்டும் தான்.

புதுக்கோட்டை நகர மக்கள் பெரிதும் எதிர்பார்க்கபட்ட திருவப்பூர் இரயில்வே மேம்பாலம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.