இந்த விழாவில் சொக்கநாதபட்டி கிராம மக்கள் ஒன்றிணைந்து புலி ஆட்டம், மயில் ஆட்டம், ஒயிலாட்டம் மற்றும் பல்வேறு வேடமணிந்து பொதுமக்கள் மத்தியில் அம்மன் கோவில் முன்பு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக பல்வேறு ஆட்டங்கள் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மேலும் இதேபோல் பொன்னமராவதி ஒன்றியத்திலுள்ள செம்பூதி, சங்கம்பட்டி உள்ளிட்ட ஊர்களில் புலிக்கூத்து ஆட்டம் வெகுவிமர்சியாக நடைபெற்றது.
பொன்னமராவதி அருகே அம்மன் குறிச்சியில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பாரிவேட்டை விழாவில் புலிக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சியில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழாவில் கடைசி நாள் நிகழ்வில் பாரிவேட்டை விழா நடைபெறும்.