திருமயத்தில் புதிய அரசு கலை கல்லூரி

1652

புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியின் பெயரை ‘கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி’ என மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் புதிய அரசு கலை கல்லூரி அமைக்கப்படும் என சட்டசபையில் அறிவிப்பு.

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் ஆறு கோடி மதிப்பில் புதிய நூலகம் அமைக்கப்பட உள்ளது

இன்றைய பேரவை மானியக் கோரிக்கை உயர்கல்வித்துறை சார்பாக புதுக்கோட்டையில் அமைந்துள்ள அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி மீண்டும் கலைஞரின் பெயர் சூட்ட அரசாணை வெளியிடப்பட்டது..

மற்றும் புதுக்கோட்டை அரசு மாமன்னர் கலைக் கல்லூரிக்கு 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன நூலகம் அமைக்கவும் கல்லூரியின் வளாகத்தில் நவீன கட்டடங்கள் அமைக்கவும் பேரவையில் அறிவித்த மாண்புமிகு அமைச்சர் திரு.முனைவர் க.பொன்முடி அவர்களுக்கும் அமைச்சர்கள் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்களுக்கும் சுற்றுச்சூழல் அமைச்சர் மாண்புமிகு சிவ.வீ. மெய்யநாதன் அவர்களுக்கும் இத்திட்டத்தை கொண்டுவர காரணமாக இருந்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மதிப்புமிகு டாக்டர் வை.முத்துராஜா M B B S அவர்களுக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தின் மாணவர்கள் சார்பாகவும் பொது மக்களின் சார்பாகவும் நன்றிகள்.