திருமயம் அருள்மிகு ஸ்ரீசத்தியமூர்த்தி பெருமாள் கோயில்ஸ்ரீ வைகுண்ட ஏகாதேசி திருவிழா இன்று காலை பரமபத வாசல் சிறப்பாக திறக்கப்பட்டது..🙏🙏🙏
சிங்கார கொட்டகையில் எழுந்தருளிய திருமயம் ஸ்ரீ சத்தியமூர்த்தி பெருமாள்
திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயில் வைணவ தளங்களில் திருத்தலங்களில் முக்கியமானதாகும்
வருடம்தோறும் வைகுண்ட ஏகாதியை முன்னிட்டு பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடத்தப்படும்.
திருமயம் ஸ்ரீ சத்தியமூர்த்தி பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதேசி பெருந்திருவிழாவான இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஸ்ரீதேவி ஸ்ரீ பூதேவி சமேத ஸ்ரீ சத்தியமூர்த்தி பெருமாள் சுந்தரபாண்டி மண்டபத்தில் அனந்தசயன கோலத்தில் எழுந்தருளினார்கள்
5.10மணிக்கு பரமபதம் வாசலில் ராஜா அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ சத்தியமூர்த்தி பெருமாள் 5.40 மணிக்கு சிங்கார கொட்டகையில் சேர்த்தி ஆகி எழுதருளினார்
அதன்படி இன்று அதிகாலை காலை 3மணி முதல் திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை சேவை காலம், அனந்தசயனம் அலங்காரம், ராஜ அலங்காரம் உள்ளிட்டவைகள் பெருமாளுக்கு செய்திருந்தனர். இதனை தொடர்ந்து காலை 5.00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
அப்போது ராஜ அலங்காரத்தில் பெருமாளை கண்ட பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா பெருமாளே பரம்பொருளே என கோசம் எழுப்பி பெருமாளை வணங்கினர்.
நிகழ்ச்சியில் திருமயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டத்துறை அமைச்சருமான எஸ்.ரகுபதி உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்