புதுக்கோட்டை நகராட்சி இயல்பு கூட்டம் நகர் மன்ற தலைவர் திலகவதி தலைமையில் துணைதலைவர் லியாகத் அலி ஆணையர் நாகராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது
இதில் சிறப்பு பார்வையாளராக எம்எல்ஏ முத்துராஜா கலந்துகொண்டு பேசியதாவது
திமுக அரசானது பாரபட்சம் இன்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்களை வாரி வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது
15 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்ட குடிநீர் தற்போது 5 நாட்களுக்கு ஒரு முறை சீராக வழங்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டையின் நகராட்சிக்கு சாலைகள் அமைக்க 3 கோடி ரூபாய் தெரு விளக்குகள் அமைக்க 2 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தைப்பேட்டையில் ஒருங்கிணைந்த தினசரி காய்கறி மார்க்கெட் அமைக்க ரூபாய் 6 கோடி வழங்கப்பட்டுள்ளது.
ரூபாய் 650 கோடியில் புதிய குடிநீர் திட்டம் கொண்டுவர திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளோம்
இது தவிர நகர எல்லைக்குள் ஒரு சுகாதார நிலையமும் இரண்டு சுகாதார மையமும் அமைக்க ஆணை பெறப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது.
மேலும் திருவப்பூரில் மேம்பாலம் அமைப்பு அமைப்பதற்கு தமிழக அரசும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது
விரைவில் புதுக்கோட்டை நகராட்சி மக்கள் அனைத்து வசதிகள் பெறும் வகையில் வளர்ச்சித் திட்டங்ககள் அதிக அளவில் கொண்டு வரப்படும்
இவ்வாறு எம்எல்ஏ முத்துராஜா கூறினார்