மகளிர் சுய உதவி குழுக்கள் கடனுதவி!!!

142

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடனுதவிகள், மணிமேகலை விருதுகள், மாநில அளவிலான வங்கியாளர் விருதுகள் வழங்கி ,புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை காணொளி காட்சி வாயிலாக திருச்சியில் இருந்து தொடங்கி வைத்தார் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்.

அதன் அடிப்படையில் இன்று புதுக்கோட்டையில் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி காசோலை வழங்கி சிறந்த வங்கிகளுக்கு விருதுகள் வழங்கிய சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ் ரகுபதி அவர்களும் சுற்றுச்சூழல் அமைச்சர் மாண்புமிகு சிவ.வீ மெய்யநாதன் அவர்களும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு டாக்டர் வை முத்துராஜா அவர்களும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி உயர்திரு கவிதா ராமு அவர்கள் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு கே கே செல்லபாண்டியன் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் தோழர் M சின்னத்துரை நகர மன்ற தலைவர் திருமதி திரு திலகவதி செந்தில் மற்றும் மாவட்டத்திற்கு உட்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மகளிர் சுய உதவி குழுக்கள் அரசு துறை சார்ந்த அனைத்து அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்