*சமூக நீதி காத்த சிங்கப்பெண் ஆட்சியர் கவிதா ராமு*
*அம்பேத்கர் மக்கள் இயக்கம் புகழாரம்*
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வாசல் என்ற கிராமத்தில் டிசம்பர் 26 அன்று ஆதிதிராவிடர் வசிக்கும் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சமூக விரோதிகள் மலத்தை கலந்து விட்ட செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் உறைய செய்தது இது தொடர்பாக அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் நேரில் சென்று ஆய்வுசெய்தார்.அந்த நேரத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் அந்த இடத்திற்கு நேரில் விசாரிக்க அதிகாரிகளுடன் வந்தனர்.
மக்களிடம் பேசும்பொழுது அந்த ஊரில் தீண்டாமை அதிகம் இருப்பது தெரிய வந்தது. பட்டியலின மக்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை என்று கூறியது அனைவரையும் மிக அதிர்ச்சியடைய வைத்தது. உடனே மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அருகிலிருந்த ஊர் கோவிலுக்கு சென்று கோவிலை திறக்க உத்தரவிட்டார், ஆனால் வேற்று சாதியினர் கோவிலை திறக்க தயக்கம் காட்டினார், பின் மாவட்ட ஆட்சியரின் அழுத்தத்தின் விளைவாக சிறிது நேரத்தில் கோவில் திறக்க பட்டது அனைத்து மக்களும் கோவிலுக்குள் அனுமதிக்கபட்டார்கள் . மூன்று தலைமுறைகளாக அனுமதி மறுக்க ப்பட்ட இனத்திற்கு கோவிலுக்குள் நுழைய , எந்த சமரசத்துக்கும் அடிபணியாமல் அனுமதி பெற்று தந்து சமூக நீதி காத்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அவர்களுக்கு அம்பேத்கர் மக்கள் இயக்கம் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறது. அனைத்து ஆட்சியர்களும் புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு போன்று இருந்தால் இந்தியா சமத்துவ நாடாக மலரும் நாள் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு இளமுருகு முத்து தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.