குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு – கொடூரத்தின் உச்சம்
புதுக்கோட்டை: இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்டதாக மக்கள் புகார் அளித்த நிலையில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே ஆகியோர் நேரில் ஆய்வு! இந்த இழிவு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு;தொட்டியில் இருந்து கழிவு நீர் வெளியேற்றம்!
பட்டியலின மக்களை கோயிலுக்குள் அழைத்து சென்ற ஆட்சியர்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பல தலைமுறைகளாக அய்யனார் கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்படுகிறது என புகார் தெரிவித்த பட்டியலின மக்களை கையோடு கோயிலுக்குள் அழைத்து சென்று வழிபட வைத்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமம் வேங்கைவயல் பட்டியலின மக்களை, மாவட்ட ஆட்சியர் கோயிலுக்குள் அழைத்துச் சென்றபோது, சாமி வந்தது போல ஆடி பட்டியலின மக்களை இழிவாக பேசிய, கோயில் பூசாரியின் மனைவி சிங்கம்மாள் மீது SC/ST வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு; அதே ஊரைச் சேர்ந்த அஞ்சப்பன் என்பவர் மீதும் வழக்கு!
அங்குள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறையை கடைபிடித்த கடை உரிமையாளர் மூக்கையா மற்றும் மனைவி மீதும் வழக்குப்பதிவு; சிங்கம்மாள், மூக்கையா இருவரையும் போலீசார் கைது செய்தனர்
‘சாதிய பாகுபாடு இருந்தால் கடும் நடவடிக்கை’
புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்த வடிவில் சாதிய பாகுபாடு இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
சாதிய பாகுபாடு குற்றங்கள் குறித்து 94433 14417 என்ற Whatsapp எண் மூலமாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம்
– புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு