மனநல நல் ஆதரவு மன்றம்” மற்றும் நட்புடன் உங்களோடு எனும் மனநலன் காக்கும் “மனம்”

323

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக பள்ளி கல்லூரி மாணவ மாணவர்களின் மனவலிமையை மேம்படுத்தும் வகையில் “மனநல நல் ஆதரவு மன்றம்” மற்றும் நட்புடன் உங்களோடு எனும் மனநலன் காக்கும் “மனம்” 14416 எனும் திட்டத்தை சென்னை, கீழ்ப்பாக்கம், அரசு மனநல மருத்துவ நிலையத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அறிமுகப்படுத்திய துவக்க விழாவில்

காணொளி காட்சி வாயிலாக புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு டாக்டர் வை முத்துராஜா அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு திருமதி கவிதா ராமு அவர்கள் கலந்து கொண்டனர்

இந்நிகழ்வின் தொடர்ச்சியாக மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் 75 அவசர கால ஊர்திகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

இந்நிகழ்வில் மருத்துவக் கல்லூரிமுதல்வர் மற்றும் மருத்துவ துறை சார்ந்த அதிகாரிகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.