பாலியல் தொல்லை கொடுத்த புகார்: கௌரவ விரிவுரையாளர்கள் பணி நீக்கம்

474

புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்ததாக மாணவிகளின் புகாரின்பேரில் இரண்டு கெளரவ விரிவுரையாளர்கள் பணி நீக்கம் விசாரணை குழு அறிக்கையின் அடிப்படையில், வருகை விரிவுரையாளர் முத்துக்குமரன்,விலங்கியல் துறை விரிவுரையாளர் கலையரசன் ஆகிய இருவரை பணிநீக்கம் செய்து கல்லூரியின் முதல்வர் திருச்செல்வம் உத்தரவு

புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு கல்லூரி விரிவுரையாளர் பாலியல் தொல்லை கொடுப்பதாக மாணவிகள் புகார் அளித்திருந்தனர் .

இந்த புகாரை யடுத்து அக்குள் கல்லூரி விரைவுரையாளர்களான பணியாற்றி வந்த வணிக நிர்வாகவியல் துறை விரிவுரையாளர் முத்துக்குமரன், விலங்கியல் துறை விரிவுரையாளர் கலையரசன் ஆகிய இரண்டு பேரை பணி நீக்கம் செய்து கல்லூரி முதல்வர் திருச்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.