திருப்பதி அறங்காவலர் குழு அதிகாரி தர்மா ரெட்டியின் மகன் சந்திர மௌலி ரெட்டி மரணம்

251

திருப்பதி அறங்காவலர் குழு அதிகாரி தர்மா ரெட்டியின் மகன் சந்திர மௌலி ரெட்டி மரணம்

கடந்த 18ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக காவேரி மருத்துவமனை அறிக்கை..

திருப்பதி தேவஸ்தான நிர்வாகி தர்மான ரெட்டியின் மகன் சந்திரமௌலி ரெட்டி மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

சந்திரமௌலி ரெட்டிக்கு கடந்த 18ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எக்மோ உள்ளிட்ட உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 8.20 மணியளவில் உயிர் பிரிந்ததாக காவேரி மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.

இவருக்கும் சேகர் ரெட்டி மகளுக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டிருந்தது குறுப்பிடத்தக்கது.