தமிழ்நாட்டில் புதிதாக 10 பேருந்து நிலையங்கள்

485

*தமிழ்நாட்டில் உள்ள 2 மாநகராட்சிகள் மற்றும் 8 நகராட்சிகளில் புதிய பஸ் நிலையங்கள் கட்டுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.* இதையொட்டி திருப்பூரில் ரூ.26 கோடியிலும், ஓசூரில் ரூ.30 கோடியிலும் புதிய பஸ் நிலையங்கள் அமைய உள்ளது.

அரியலூர், வேதாரண்யம், மேலூர், பட்டுக்கோட்டை, குளச்சல், பொள்ளாச்சி, வடலூர், கூடலூர் ஆகிய 8 நகராட்சிகளிலும் புதிய பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

இதற்காக மொத்தம் ரூ.115 கோடி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக 10 பேருந்து நிலையங்கள் அமைக்க 115 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு!

திருப்பூர், ஓசூர், கூடலூர், அரியலூர், வடலூர், வேலூர், வேதாரண்யம், பட்டுக்கோட்டை, குளச்சல், பொள்ளாச்சியில் புதிய பேருந்து நிலையங்கள் அமைகின்றன