கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு
04.12.2022 அன்று எழுத்து தேர்வு நடத்தப்படவுள்ளது.
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலகில் காலியாகயுள்ள 70 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவாய் வட்டாட்சியர்கள் மூலம் விண்ணப்பங்கள் கூராய்வு செய்யப்பட்டு, ஏற்கப்பட்ட விண்ணப்பதார்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதார்களுக்கும் 04.12.2022 (ஞாயிறு) அன்று எழுத்து தேர்வு கீழ்கண்ட மையங்களில் நடத்தப்படவுள்ளது.
கறம்பக்குடி தாலுகாவில் அரசு கலைக்கல்லூரி, மருதன்கோன்விடுதி, கறம்பக்குடி-622 302 தேர்வு மையமும், திருமயம் தாலுகாவில் V.S.K.கல்வியியல் கல்லூரி, பிலிவலம், திருமயம்- 622 507 தேர்வு மையமும், கந்தவர்வகோட்டை தாலுகாவில் வித்யவிகாஸ் மேல்நிலைப்பள்ளி, பழைய கந்தர்வகோட்டை 613 301 தேர்வு மையமும், புதுக்கோட்டை தாலுகாவில் ராணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புதிய பேருந்து நிலையம் அருகில், புதுக்கோட்டை -622001 தேர்வு மையமும், ஆலங்குடி தாலுகாவில் M.N.S.K பொறியியல் கல்லூரி தெட்சிணாபுரம், வல்லத்திராக்கோட்டை, ஆலங்குடி 622305 தேர்வு மையமும், இலுப்பூர் தாலுகாவில் மதர்தெரசா வேளாண்மை கல்லூரி, மேட்டுச்சாலை, இலுப்பூர்-622102 தேர்வு மையமும், பொன்னமராவதி தாலுகாவில் அமலா அன்னை, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புதுப்பட்டி, சந்தை வீதி, பொன்னமராவதி -622 407 மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொன் புதுப்பட்டி, பொன்னமராவதி- 622 407 தேர்வு மையமும், குளத்தூர் தாலுகாவில் மூகாம்பிகை பொறியியல் கல்லூரி, சீனிவாச நகர், களமாவூர், கீரனூர்-622 502 தேர்வு மையமும், விராலிமலை தாலுகாவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, செக்போஸ்ட் நிறுத்தம், விராலிமலை- 621 316 தேர்வு மையமும், ஆவுடையார்கோவில் தாலுகாவில் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆவுடையார்கோவில்- 614 618 தேர்வு மையமும், அறந்தாங்கி தாலுகாவில் லாரல் மேல்நிலைப்பள்ளி, குரும்பக்காடு, அறந்தாங்கி -614 616 மற்றும் ஐடியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அறந்தாங்கி -614 616 மற்றும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, அறந்தாங்கி-614 616 தேர்வு மையமும், மணமேல்குடி தாலுகாவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மணமேல்குடி 614 620 தேர்வு மையமும், ஆகிய மையங்களில் எழுத்து தேர்வு நடத்தப்படவுள்ளது.
இணைய வழியில் பதிவு செய்து ஏற்கப்பட்ட விண்ணப்பதார்களுக்கு எழுத்து தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பத்தில் பதிவு செய்த கைபேசி எண் / மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதன் மூலம் அனுமதிச் சீட்டினை உதவியாளர் பணிக்கு இணைய வழியில் விண்ணப்பித்த இணையதள முகவரியான https//agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-174 என்ற இணையதளத்தினுள் சென்று பதிவு எண்ணையும் கைபேசி எண்ணையும் பதிவு செய்து அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதார்களுக்கு தபால் மூலம் பதிவஞ்சலில் தேர்வு அனுமதிச்சீட்டு அனுப்பி வைக்கப்படும். மேலும், கூராய்வு செய்து ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனுமதி சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி உரிய தேர்வு மையத்திற்கு சரியான நேரத்தில் கலந்து கொள்ளுமாறு தேர்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அனைத்து விண்ணப்பதாரர்களால் தேர்வு நாளன்று கீழ்காணும் விதிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் அனைவரும் காலை 09.30 மணிக்கு தேர்வர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதார்கள் எவரும் தேர்வு அறைக்குள் காலை 9.50 மணிக்கு பின் அனுமதிக்கப்படமாட்டார்கள் மற்றும் காலை 10.50 மணிக்கு முன் தேர்வு மையத்தைவிட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். அனுமதி சீட்டு இல்லாமல் எந்த விண்ணப்பதாரர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் கருப்பு பால்பாய்ண்ட் பேனாவை மட்டும் பயன்படுத்த வேண்டும். அனுமதி சீட்டு மற்றும் பால்பாய்ண்ட் பேனாவைத்தவிர தேர்வு அறைக்குள் வேறு எந்த பொருளையும் கொண்டு வரக்கூடாது. விண்ணப்பதாரர்கள் அலைபேசி, புத்தகங்கள், கைப்பைகள் மற்றும் வேறு எந்த மின்னணு சாதனங்களையும் தேர்வு மையத்திற்குள் கொண்டு வரக்கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், புதுக்கோட்டை.