புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனை நாளை முதல் மீண்டும் செயல்பட தொடங்குகிறது

573

புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனை நாளை முதல் மீண்டும் செயல்பட தொடங்குகிறது

துவக்க விழாவில் அமைச்சர் S.ரகுபதி புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா உள்ளிட்டோர் பங்கேற்பு.

புதுக்கோட்டை நகர மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்த முத்துலட்சுமி ரெட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மீண்டும் நாளை 16 12 22 அன்று மாலை 5:00 மணிக்கு செயல்பாட்டுக்கு வருகிறது.

மருத்துவக் கல்லூரி புதுக்கோட்டையில் செயல்பட தொடங்கிய பின் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனை மூடப்பட்டு புற நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்கள் என அனைத்து செயல்பாடுகளும் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டது

புதுக்கோட்டையில் இருந்து மருத்துவக் கல்லூரி வெகு தொலைவில் இருப்பதாகவும் இரவு நேரங்களில் நோயால் பாதிக்கப்படுபவர்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் செல்ல முடியாமல் அவதிப்படுவதாகவும்

ஆகவே மக்கள் தொகை நெருக்கம் அதிகம் உள்ள புதுக்கோட்டை நகரிலே பழைய அரசு தலைமை மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வந்தனர் .

இந்த நிலையில் புதுக்கோட்டை தொகுதி எம்எல்ஏ முத்துராஜா தேர்தல் வாக்குறுயில் கூறியிருந்தபடி முதல்வர் ஸ்டாலின் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோரிடம் கோரிக்கை வைத்து சட்டமன்றத்தில் பேசியும் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையை போராடி மீண்டும் திறக்க முயற்சி மேற்கொண்டார்.

நாளை மீண்டும் துவங்க உள்ள டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் தூய்மை பணியினை புதுக்கோட்டை நகராட்சி தலைவர் திலகவதி செந்தில் நேரில் ஆய்வு செய்த போது..



இந்த கோரிக்கையின் தொடர் நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து

நாளை 16 ந்தேதி மாலை 5மணிக்கு திறப்பு விழா நடைபெறுகிறது இதனை தொடர்ந்து தினந்தோறும் முதல் காலை 8மணி முதல் இரவு 8 மணி வரை 2க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மருந்தாளுனர்கள் என புற நோயாளிகள் பிரிவு செயல்பட தொடங்குகிறது.


இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ரகுபதி எம்எல்ஏ முத்துராஜா மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் நகரச் செயலாளர் செந்தில் மற்றும் பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்

நாளை செயல்படும் துவங்கும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை துவக்க விழாவில் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் சமூக நல ஆர்வலர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் அனைவரும் பங்கேற்று விழா சிறக்க ஆதரவளிக்க வேண்டுமாய் புதுக்கோட்டை சட்டமன்றத் உறுப்பினர் முத்துராஜா அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்