புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களுக்கு எதிராக செயல்படுகிறாரா ராமநாதபுரம் MP?

487

ராமேஸ்வரத்திலிருந்து புறப்படும் வடமாநில ரயில்களை மதுரை வழித்தடத்திற்கு மாற்ற ரயில்வே அமைச்சர் வரை சென்ற கோரிக்கை!

ராமேஸ்வரத்திலிருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் மொத்த ரயில்களின் எண்ணிக்கை 5. அயோத்தி, பனாரஸ், புவனேஸ்வர், அஜ்மீர், ஓகா உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன. இந்த ரயில்களில் ஓகா ரயில் மட்டும் மதுரை வழியாகவும் மற்ற நான்கு ரயில்களும் மானாமதுரை-காரைக்குடி-புதுக்கோட்டை-திருச்சி பாதையிலும் செல்கிறது.

இவற்றில்

  1. புவனேஸ்வர் ரயிலுக்கு புதுக்கோட்டை, சிவகங்கை, காரைக்குடி க்கு இருமார்கங்களிலும்,
  2. பனாரஸ் ரயிலுக்கு காரைக்குடியில் இருமார்க்க நிறுத்தமும், சிவகங்கை & புதுக்கோட்டைக்கு ஒரு வழி நிறுத்தமும் உள்ளது.
  3. அயோத்தி ரயிலுக்கு காரைக்குடியில் ஒரு வழி நிறுத்தம் , மற்றும் சிவகங்கை, புதுக்கோட்டைக்கு இருமார்க்கங்களிலும் நிறுத்தம் வழங்கப்படவில்லை.
  4. அஜ்மீர் ரயிலுக்கு திருச்சி-ராமேஸ்வரம் இடைப்பட்ட மானாமதுரை க்கு மட்டும் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

பாதையின் நீளம்.

  1. ராமேஸ்வரம்-திருச்சி வழி புதுக்கோட்டை- 264கிமீ
  2. ராமேஸ்வரம்-திருச்சி வழி மதுரை- 321கிமீ

ராமேஸ்வரத்திலிருந்து காரைக்குடி-புதுக்கோட்டை பாதையில் திருச்சி செல்வதைவிட மதுரை பாதையில் திருச்சி செல்வது என்பது ’57கிமீ’ தூரம் அதிகம்.

சரி ராமநாதபுரத்திற்கு வருவோம். ராமேஸ்வரத்திலிருந்து புறப்படும் எந்த ஒரு ரயிலும் மதுரை வழியோ அல்லது காரைக்குடி வழியோ அந்த ரயில் ராமநாதபுரம் ரயில் நிலையத்தை கடந்த தான் செல்லவேண்டும். வடமாநில ரயில்களை எடுத்துக்கொண்டோம் என்றால் புதுக்கோட்டை, சிவகங்கையின் நிலை தான்
ராமநாதபுரத்திறக்கும். புவனேஸ்வர் ரயிலுக்கு (இருவழி நிறுத்தமும்), பனாரஸ் ரயிலுக்கு(ஒரு வழி நிறுத்தமும்) மட்டுமே இராமநாதபுரம் ரயில் நிலையத்திற்க்கு வழங்பட்டுள்ளது.

மேலும் மதுரை வழியாக இயக்குவதால் வருவாய் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார். நிச்சயமாக மதுரை வழியாக இயக்கப்பட்டால் வருவாய் அதிகரிக்கும் 4 முனை சந்திப்பு, நகரத்தின் அனைத்து பகுதிகளுக்கும் நகர பேருந்து வசதி, பிரசித்திபெற்ற சுற்றுலா தளம் கொண்ட ஏந்தோவொரு சந்திப்பும் வருவாயயை வாரிக்குவிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் தலா வருமானம் குறைவாகவும், போதுமான தொழில்வளர்ச்சியின்றியும், விவசாயத்திற்கும் வானம் பார்த்த பூமியாக உள்ள புதுக்கோட்டை, சிவகங்கையோ பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ள மாவட்டங்களாகும். இதே நிலை ராமநாதபுரம் மாவட்டத்திறக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறோம். மேற்கண்ட மாவட்டங்களுக்கு பேருந்தை ஒப்பிடும்போது ரயில்கள் என்பது மிகவும் அவசியமான ஒன்று..

ரயில்வே என்பது பொது போக்குவரத்திற்கு உதவி புரியும் சேவை துறை, வருவாயை மட்டுமே அடிப்பாக கொண்டு ரயில்கள் இயக்கப்பட்ட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மேலும் மதுரை வழியாக செல்லும் ரயில்களை ஒப்பிடும்போது மானாமதுரை-திருச்சி பாதையில் இயங்கும் ரயில்கள் 25% கூட இருக்காது.

மாண்புமிகு ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினரின் பணிவான கவனத்திற்கு,

அனைத்து வடமாநில ரயில்களையும் புதுக்கோட்டையில் நிறுத்தி செல்ல புதுக்கோட்டை பகுதி மக்கள் போராடி வரும் நிலையில் தங்களின் இது போன்ற செயல்பாடுகள் எங்களை கலக்கமடைய செய்துள்ளது.

ஒரு பாராளுமன்ற உறுப்பினராக வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாவட்டங்கள் வளர்ச்சிக்கு உதவுங்கள். எனவே #ராமநாதபுரம், #சிவகங்கை, #புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் தலைநகர ரயில் நிலையங்களில் நின்று செல்லாத அனைத்து வடமாநில ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும்படியும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி🙏

குறிப்பு: புதுக்கோட்டை ரயில் நிலையத்தை பயன்படுத்தும் 10 இல் ஒருவர், ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட #அறந்தாங்கி சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Courtesy : PUDUKKOTTAI RAIL USERS