மார்கழி 20 (4.1.2023) திருத்தேர் பவனி!
மார்கழி திருவாதிரை பெருவிழா 2022-2023!
(27/12/2022 முதல் 6/1/2023).
மார்கழி 11 (26.12.2022) திங்கட்கிழமை மாலை 5:30 – 7:16 மணிக்குள் விக்னேஸ்வரபூஜை.
முதல்நாள் திருவிழா!
மார்கழி 12 (27.12.2022) செவ்வாய்கிழமை காலை 5 மணிமுதல் 6:35 மணிக்குள் கொடியேற்றம் மாணிக்கவாசகர்
நிஜரூபம் தரிசனம்.
மாலை வெள்ளிச்சிவிகை வாகனம் அரிமர்த்தன பாண்டியன் அலங்காரம்!
இரண்டாம் நாள் திருவிழா!
மார்கழி 13 (28.12.2022) காலை வெள்ளி சூரியபிரபை வாகனம் நிஜரூப அலங்காரம்.
மாலை வெள்ளி சந்திரபிரபை வாகனம் நிஜரூப அலங்காரம்.
மூன்றாம்நாள் திருவிழா!
மார்கழி 14 (29.12.2022) காலை வெள்ளி படிச்சட்டம் வாகனம் முதலமைச்சர் அலங்காரம்.
மாலை வெள்ளி பூத வாகனம் ராஜ அலங்காரம்.
நான்காம் நாள் திருவிழா!
மார்கழி 15 (30.12.2022) காலை திரிபுர எரித்த காட்சி
மாலை வெள்ளி கைலாய வாகனம் சிவபெருமான் அலங்காரம்.
ஐந்தாம் நாள் திருவிழா!
மார்கழி 16 (31.12.2022) காலை வெள்ளிச் சிவிகை வாகனம் சிவபூஜை காட்சி
மாலை வெள்ளி படிச்சட்டம் வாகனம் ராஜா அலங்காரம்.
ஆறாம் நாள் திருவிழா!
மார்கழி 17 (1.1.2023) காலை ஊர்த்துவ தாண்டவ அலங்காரம் பக்தி உலா காட்சி
மாலை வெள்ளி யானை வாகனம் யானைபடை தளபதி அலங்காரம்.
ஏழாம் நாள் திருவிழா!
மார்கழி 18 (2.1.2023) காலை உருத்திராட்ச மணி வாகனம் பிட்டு நேர்பட மண் சுமந்த பேரருள் காட்சி.
மதியம் 108 சங்கபிஷேகம்.
மாலை குருத்தோலை சப்பரத்தேர் வெள்ளி மஹா ரிஷப வாகனம் சிவபெருமான் அலங்காரம்.
எட்டாம் நாள் திருவிழா!
மார்கழி 19 (3.1.2023) காலை வெள்ளி படிசட்டம் வாகனம் எல்லாம் வல்ல சித்தர் பெருமான் திருவாசகத்திற்கு உரைத்த காட்சி.
மாலை வெள்ளி குதிரை வாகனம் குதிரை சேவகன் அலங்காரம்.
ஒன்பதாம் நாள் திருவிழா!
மார்கழி 20 (4.1.2023) அதிகாலை 5மணி முதல் 6மணிக்குள் மாணிக்கவாசகர் திருத்தேருக்கு எழுந்தருளல் காலை 10மணிக்கு வடம் பிடித்தல் நிஜரூப அலங்காரம் திருத்தேர் பவனி.
மாலை வெள்ளி சந்திரபிரபை வாகனம் நடராஜர் அலங்காரம்.
பத்தாம் நாள் திருவிழா!
மார்கழி 21 (5.1.2023) காலை வெள்ளிப் படிச்சட்டம் வாகனம் பிச்சடானர் அலங்காரம் பஞ்சபிரகார சேவை.
மாலை ராஜா அலங்காரம்
வெள்ளிரதத்தில் பவனி.
பதினோராம் நாள்
மார்கழி 22 (6.1.2023) அதிகாலை 5மணி முதல் 6மணிக்குள் இங்கு சிவபெருமான் உருவமற்று அருவியாக இருப்பதனால் நம்பியார் எனும் அந்தணர் சிவவேடம் அணிந்து உபதேசக்காட்சி!
புதிதாக செய்யப்பட்ட ஐம்பொன் நடராஜருக்கு வடக்கூர் அருள்மிகு ஸ்ரீ ஆதிகைலாசநாதர் திருக்கோயிலில் காலை 7மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் இரவு நான்கு ரதவீதிகளிலும் வீதி உலா வருகிறார். திருவிழா நிறைவு.