இளைஞர் நலன் விளையாட்டு துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் துறை அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்….
தலைமைச் செயலகத்தில் முழு வீச்சில் தயாராகும் அறை…
நாளை மறுநாள் காலை 9:30 மணிக்கு அமைச்சராக பதவி ஏற்கிறார் உதயநிதி ஸ்டாலின் – ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
திரு உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி (எண்.19), அமைச்சர்கள் குழுவில் இணைத்துக்கொள்ள மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பரிந்துரைத்துள்ளார். இந்தப் பரிந்துரைக்கு மாண்புமிகு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். பதவியேற்பு விழா டிசம்பர் 14, 2022 அன்று காலை 9.30 மணிக்கு நடைபெறும். தர்பார் ஹாலில், ராஜ்பவன், சென்னை-22.