புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறந்த தலைமை ஆசிரியர்!!

4776

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறந்த தலைமை ஆசிரியராக விருது பெற்ற அத்தாணி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியருக்கு பள்ளி மேலாண்மை குழு சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த அத்தாணி ஊராட்சி ஒன்றிய அரசு மேல்நிலைப் பள்ளியில்
இந்தாண்டு நீட் தேர்வு எழுதிய மாணவ முதல் தேர்விலேயே வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்ததற்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறந்த தலைமை ஆசிரியராக பள்ளி கல்வித்துறை சார்பில் விருது பெற்ற தலைமை தலைமையாசிரியர் சேகரை பாராட்டும் வகையில்
தமிழகஅரசு ரூ 25 லட்சம் பள்ளி பராமரிப்பு பணிக்காக வழங்கி உள்ளது.
இந்நிலையில் தலைமை ஆசிரியரின் சேவையை பாராட்டி அத்தாணி அரசு பள்ளி பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியானது பள்ளி மேலாண்மை குழு தலைவி வனிதா மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் பள்ளி வளர்ச்சி குழு தலைவர் ராஜகோபால் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி சோமசுந்தரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம் பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் அருணாச்சலம் மற்றும் உறுப்பினர்கள் பள்ளி ஆசிரியர்கள் மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசியபெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர் துரைராஜ்

இப்பள்ளியில் படிக்கின்ற மாணவிகள் மருத்துவராக ஆக வேண்டும் என்ற கனவு நீண்ட நாட்களாக கண்டிருந்தோம்

ஆனால் அந்தக் கனவு இன்று நிறைவேறி உள்ளது அது மட்டும் இல்லாமல் புதுக்கோட்டை மாவட்டத்திலேயே சிறந்த தலைமை ஆசிரியராக விருது பெற்ற இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சேகர் அவர்களால் இந்தப் பள்ளிக்கும் எங்கள் கிராமத்திற்கும் பெருமையாக இருக்கின்றது என பேசினார் .இதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர் அவர்களுக்கும் தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறைக்கும் மனதார நன்றிகள் தெரிவித்து பேசினர்

இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.