திருமயம் ஸ்ரீ சத்தியமூர்த்தி பெருமாள் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதேசி பெருவிழா

422


திருமயம் ஸ்ரீ சத்தியமூர்த்தி பெருமாள் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு டிசம்பர் 23ந் தேதி (23-12-2022) முதல் ஜனவரி 1ந்தேதி(01-01-2023) வரை பகல் பத்து உத்ஸவம் நடைபெறும்.

ஜனவரி 1-ந்தேதி இரவு ஸ்ரீ சத்தியமூர்த்தி பெருமாள் மோகினி அலங்காரத்தில் திருவீதி உலாவில் எழுந்தருள்வார்.

ஜனவரி 2-ந் தேதி திங்கட்க்கிழமை அதிகாலை பரமபதம் வாசல் திறக்கப்படும்.

முன்னதாக சுந்தரபாண்டி மண்டபத்தில் ஸ்ரீ தேவி ஸ்ரீ பூதேவி சமேத ஸ்ரீ சத்தியமூர்த்தி பெருமாள் அனந்தசயன கோளத்தில் எழுந்தருள்வார்கள். அதன்பிறகு விஸ்வரூபம் கண்டருளிய பிறகு அதிகாலை 5.30 மணிக்கு இராஜ அலங்காரத்தில் பரமபதம் வாசலில் எழுந்தருளி திருக்கோவில் பிரகாரம் வந்து சிங்காரக்கொட்டகை மண்டபத்தில் எழுந்தருள்வார்.



அன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் (ஜனவரி 11) இராப்பத்து உத்ஸவத்தில் பரமபதம் வாசல் வழியாக எழுந்தருளி திருவீதி உலாவில் எழுந்தருள்வார்

இராப்பத்து உத்ஸவத்தில் எழுந்தருளிய பிறகு ஆஸ்தானம் சேர்த்தி ஆவார்.