9-A நத்தம் பண்ணை பகுதியில் புதிய ரேஷன்கடை

858

9ஏ நத்தம் பண்ணை ஊராட்சி பகுதிக்கு புதிய ரேஷன் கடை ஊராட்சி மன்ற தலைவரிடம் கலெக்டர் உறுதி

புதுக்கோட்டை அருகே உள்ள 9-A நத்தம் பண்ணை பகுதியில் புதிய ரேஷன்கடை வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் ஏவிஎம் க.பாபு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் கவிதாராமு அவர்களிடம் கோரிக்கை மனுவை வழங்கினார்.


அந்த மனுவில் தங்களது ஊராட்சியில் 3000 மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருவதாகவும் அவர்கள் ரேஷன் பொருட்களின் தேவைக்கு அடப்பன்காரசத்திரம் திருவப்பூர் மற்றும் திருக்கோகர்ணம் ரேஷன் கடைகளை நம்பி இருப்பதாகவும் எங்கள் பாலன் நகர் பகுதியில் குறிப்பாக அன்னம்மாள் புரத்தில் புதிய கடை அமைக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்

ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கையை ஏற்ற கலெக்டர் கவிதா ராமு அந்தப் பகுதியில் விரைவில் புது ரேஷன் கடை அமைக்க ஆவண செய்வதாக ஊராட்சி மன்ற தலைவர் ஏவிஎம் க பாபு அவர்களிடம் உறுதி அளித்தார்