தமிழகத்தில் மின் நுகர்வோர் எண் – ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இலவச மின்சாரம், மானிய விலை மின்சாரம் என அனைத்து பயனர்களும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும். ஆன்லைனில் https://nsc.tnebltd.gov.in/adharupload/ அரசின் அதிகாரப்பூர்வ இணையபக்கத்தில் மின் இணைப்பு – ஆதார் இணைக்கலாம். அவ்வாறு செய்யும் போது பயனர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு இங்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள இணையபக்கத்திற்கு சென்று உங்கள் மின் இணைப்பு எண்ணை பதிவிடவும்.
அடுத்து மின் இணைப்புடன் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை பதிவிடவும். அந்த எண்ணிற்கு OTP வரும். அதை கொடுத்து ஆதார் எண், ஆதாரை பதிவேற்றம் செய்ய வேண்டும். இப்போது 3 ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் இந்த மின் இணைப்பின் உரிமையாளர், வாடகைதாரர் மற்றும் 3-வதாக வீட்டின் உரிமையாளர் ஆனால் மின் இணைப்பு வேறு ஒருவர் பெயரில் உள்ளது என்ற ஆப்ஷன்கள் வரும். இதை நீங்கள் தேர்ந்தெடுத்து சப்மிட் கொடுக்க வேண்டும். மின் இணைப்போடு பதிவு செய்த மொபைல் எண் இல்லை EB – ஆதார் எண் இணைக்கும் போது OTP வரும். முன்னர் மின் இணைப்போடு கொடுத்த மொபைல் நம்பர் தொலைந்து விட்டது, உங்களிடம் இல்லை என்றால், கவலை வேண்டாம். தற்போது உங்களிடம் இருக்கும் எண்ணை பதிவிட்டால், அதில் ஆதாரை இணைக்கலாம்.வாடகைக்கு இருப்போர் என்ன செய்வது? வாடகைக்கு இருக்கும் நபர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைத்தால், மின் இணைப்பு அவரது பெயருக்கு மாறிவிடுமா? என்றால் இல்லை. ஆதார் இணைப்பு என்பது ஒரு விவரம் மட்டுமே. வீட்டின் உரிமையாளர் மட்டுமே மின் இணைப்பின் பெயரில் மாற்றம் செய்ய முடியும் பல மின் இணைப்புகளுக்கும் ஒரே ஆதார் 5 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளேன். ஒவ்வொரு வீட்டுக்கும் தனித் தனி மீட்டர்கள் உள்ளன. நான் எப்படி ஆதாரை இணைப்பது? என்று சந்தேகம் வந்தால் உங்கள் ஆதார் எண்ணையே அனைத்து இணைப்புகளுக்கும் வழங்கலாம். அதனால், எந்தப் பாதிப்பும் இல்லை. தந்தை, தாத்தா பெயரில் மின் இணைப்பு இருந்தால் என்ன செய்வது? தாத்தா/அப்பா பெயரில் மின் இணைப்பு உள்ளது. ஆனால், அவர்கள் இறந்துவிட்டனர். ஆதார் இணைப்பது எப்படி என்றால், மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்யாவிட்டாலும், ஆதார் இணைக்கலாம். புதிதாக யார் பெயரில் மின் இணைப்பு மாற்றம் செய்ய விரும்புகிறீர்களோ அவரது அவரது பெயரில் உள்ள ஆதார் எண்ணை இணைக்கலாம். அவரது ஆதார் எண், ஆதார் அட்டை பதிவேற்றம் செய்யலாம். EB ஆதார் எண் இணைக்க டிசம்பர் 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கட்டாயம் இணைக்க வேண்டும்.