ஆண்களுக்கும் அழுகை வரும்…💧💧💧

528

💧#ஆண்களுக்கும்_அழுகை_வரும்…💧

*தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்…
*தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்…
*தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப்பட்டாலும் ஆண் அழுவான்…
*தன் மகள் திருமணம் ஆகி பிரியும் போது ஆண் அழுவான்…
*அவன் பிள்ளைகள் பெற்றோர்களை மதிக்காது நன்றியில்லாமல் ஆணவத்துடன் நடக்கும்போது வெளியில் சொல்ல முடியாமல் அழுவான்.
*காதல் கொண்ட மனைவி தன்னை ஏமாற்றுவதை அறிந்தால் அந்த ஆண் அழுவான்…

*தங்கள் குழந்தைகளுக்கான உணவு போன்றவற்றை அவர்களுக்குத் தேவையானவற்றைக் கொடுக்க முடியாமல் போனால் ஆண் அழுவான்…

*பிழைப்பை தேடி கடன் சுமைக்காக தாயகத்தைப் பிரிந்து
செல்லும்போது, தான் நேசிக்கும் அன்பானவர்கள் தன் அருகே இல்லையென ஒவ்வொரு இரவிலும் ஆண் அழுவான்…

*ஆண்கள் அழுகிறார்கள் ஆனால்… எப்படி?
இருட்டில்…
பிறர் அறியாவண்ணம்…
தலையணைகளில் முகத்தைப் புதைத்து… கழிவறையில் தண்ணீரை திறந்து…

*அவன் அழுகையின் கண்ணீரை யாரும் பார்த்துவிடக்கூடாது என நினைப்பான்…
அவன் அழுது கொண்டு இருக்கிறான் என்பதை அவன் சங்கடத்தில் விடும்
பெருமூச்சு , அதற்கு சாட்சியாகும்…



*கண்களில் வெளிப்படும் ஏக்கம்…
*நடுங்கும் கைகள்
*வார்த்தையில் தடுமாற்றம்…

*பெரும்பாலான ஆண்கள் குடும்ப சூழல், போதிய வருமானம் இல்லாதது, ஏமாற்றும் மற்றும் தேவைக்கு தேடிவரும் உறவுகள், உறவுகளின் துரோகம், போன்ற மனசு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில்தான் நிறைய ஆண்கள் வெளியில் சொல்ல முடியாமல் அழுகிறார்கள்…

*இவன் குழப்பத்தில் இருக்கிறான், பைத்தியக்காரன், என மற்றவர் நினைக்க அது அவனுக்கு மட்டும்தான் தெரியும் உள்ளுக்குள் அவன் அழுதுகொண்டு இருக்கிறான் என…

*ஒரு விஷயத்தில் இந்த ஆண் வர்க்கம் மிகவும் கெட்டிக்காரர்கள் உள்ளுக்குள்ளே அழுதுகொண்டு வெளியில் சிரிப்பது இந்த வித்தையில் ஆண் சமூகம் எப்போதுமே தேர்ச்சிப்பெற்றவையே…
ஆண்கள் இப்படித்தான் அழுகிறார்கள்.

#தண்ணீரிலே_மீன்_அழுதால்
#கண்ணீரைத்_தான்_யார்_அறிவார்..