சாலை விபத்தில் சிக்கி இரண்டு இளைஞர்கள் பலி.

538

திருப்புத்தூர் அருகே சாலை விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி போலீசார் விசாரணை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்து நெடுமரம் பாலம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு வாலிபர்கள் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் அருகே உள்ள செம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவபெருமாள் இவரது மகன் சரவணன் (21) இவர் சிராவயல் அருகே தென்கரையில் உள்ள அரசு மதுபான கடை அருகில் உள்ள பாரில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரது நண்பரான சிராவயலை சேர்ந்த பரமசிவம் என்பவரின் மகன் கோகுல்நாத் (21) இருவரும் திருப்பத்தூரிலிருந்து கீழச்சிவல்பட்டி செல்லும் வழியில் நெடுமரம் அருகே இரத்த வெள்ளத்தில் இருவரும் கிடந்துள்ளதை பார்த்து சாலையில் பயணித்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பார்க்கையில் சரவணன் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்துள்ளார்.

ரகுநாத் மிகவும் ஆபத்தான நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் கொண்டுவரப்பட்டார். பின்பு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அதன் பின்பு அங்கிருந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் ரகுநாத்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இவர்கள் சாலையில் செல்லும்போது ஏதேனும் அடையாளம் தெரியாத வாகனம் இடித்து தள்ளியதில் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரின் இறப்பும் குறித்தும் திருப்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரவணன், ரகுநாத்தின் உடல் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியிலும் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சாலை விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தது இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Source : இளையராஜா கீரவாணி