கொன்னையூர் பங்குனி திருவிழா

462

பொன்னமராவதி

கொன்னையூர் பங்குனி திருவிழாவை முன்னிட்டு சேங்கை ஊரணி அருகே சோலை செல்வம் குடும்பத்தார்கள் சார்பில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் ஒன்றான புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்வான பொன்னமராவதியில் இருந்து நாடு செலுத்தும் நிகழ்வு நடந்தது அதன் ஒரு பகுதியாக சேங்கை ஊரணி அருகே நாடு செலுத்தும் நிகழ்வில் பங்கேற்ற பக்தர்களுக்கு சோலை செல்வம் தனலட்சுமி குடும்பத்தார்கள் சார்பில்
நீர்மோர் வழங்கப்பட்டது.


இதில் பொன்னமராவதி பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன், மைலாப்பூர் மிராசு பெரியசாமி அம்பலம் ஆகியோர் தலைமை வகித்தனர், திமுக பேரூராட்சி கவுன்சிலர் இஷாவிகாஸ், இளையராஜா, உள்ளிட்டோர் முன்னிலை வகித்து பக்தர்களுக்கு தாகம் தணிக்கும் வகையில் பந்தல் அமைத்து நீர்மோர் வழங்கி சிறப்பித்தனர் இதில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி நன்றி செய்தியாளர் நிருபர் AR.சுதாகரன்