தனியார் பேருந்து விபத்து!!!

263

ஜெகதாப்பட்டினம் அருகில் சென்னை சென்ற தனியார் பேருந்து பாலத்தில் கவிழ்ந்து விபத்து!

ஜெகதாப்பட்டினம் தியேட்டர் அருகே உள்ள பாலத்தில் (4/10/2022) நேற்று இரவு 8-30 மணியளவில் தொண்டியிலிருந்து — சென்னை புறப்பட்டு சென்ற தனியார் சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து!

தாஜுதீன் யாஸ்மீன்
தொண்டி டூ சென்னை பேருந்து. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும்போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று கவிழந்த பேருந்தில் சிக்கியிருந்த பயணிகளை பொதுமக்கள் மீட்கப்பட்டனர். மேலும் ஓட்டுனரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..

இந்த பேருந்தில் தொண்டியை சேர்ந்த நான்கு பயணிகள் மட்டுமே பயணித்துள்ளனர். லேசான காயங்களுடன் மீட்கப்பட்ட பயணிகள் சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பேருந்தை மீட்கும் பணியில் போலீசாரும்,தீயணைப்பு வீரர்களும் பொதுமக்கள் உதவியுடன் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.