மின் கசிவு ஏற்பட்டு டூ வீலர் ஒர்க் ஷாப் கடை எரிந்து 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எறிந்து சேதம்!

232

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காவல் நிலையத்திற்கு உட்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகே உள்ள பாலாஜி என்பவருக்கு சொந்தமான நியூ திருப்பதி டூ வீலர் ஒர்க் ஷாப் கடையின் முன் பகுதியில் உள்ள மேற்கூறையின் மேலே சென்ற மின் கம்பியில் இருந்து அதிகாலை 5.00 மணிக்கு மேல் மின் கசிவு ஏற்பட்டு டூவீலர் ஒர்க் ஷாப் கடை முழுவதும் எரிந்து சேதமாகி உள்ளது

இந்த சம்பவம் அறிந்த அறந்தாங்கி தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அனைத்தனர்.

ஆனால் கடையின் உள்ளே பழுது பார்க்க கொடுக்கப்பட்ட 11 இருசக்கர வாகனங்கள் அனைத்தும் முழுவதும் தீயில் எரிந்து வீணாகிவிட்டது இதன் மதிப்பு
இரண்டு லட்சம் இருக்கும் என கூறப்படுகின்றது

இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்