பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்து ரசித்த ராஜபக்ச

311

இலங்கையின் முன்னாள் பிரதமர் ராஜபக்ச தனது மனைவியுடன் சேர்ந்து கொழும்பில் உள்ள திரையரங்கில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்து ரசித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்துள்ளது.


இந்த நிலையில், முன்னாள் பிரதமர் ராஜபக்சவுடன் தமிழ் எம்.பி.க்களும் சேர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்வையிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.