நற்செய்தி புதுக்கோட்டை வழியாக தீபாவளி சிறப்பு ரயில் இயக்கம்!

616

புதுக்கோட்டை வழியாக தாம்பரம் – திருநெல்வேலி இடையே தீபாவளி சிறப்பு ரயில் . முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரம் – திருநெல்வேலி ரயில் நிலையங்கள் இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

வரும் 20/10/22 அன்று
06021/தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்
➽தாம்பரம்-09:00 pm(இரவு) புறப்பட்டு
➽புதுக்கோட்டை-02:45/02:47 am
➽திருநெல்வேலி-09:00 am காலை செல்லும்

மறுமார்கத்தில்
வரும் 21/10/22 அன்று
06022/திருநெல்வேலி-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்
➽திருநெல்வேலி-01:00 Pm(மதியம்) புறப்பட்டு
➽புதுக்கோட்டை06:13/06:15 pm
➽சென்னை எழும்பூர்-03:20 am(அதிகாலை) செல்லும்

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 08:00 மணிக்கு தொடங்குகிறது.

தீபாவளி பண்டிகைக்கு அக்டோபர் 20 சென்னையிலிருந்து(தாம்பரம்) புதுக்கோட்டை வருபவர்களுக்கும், அக்டோபர் 21 அன்று திருநெல்வேலியிலிருந்து புதுக்கோட்டை வருபவர்களுக்கும் இந்த ரயில் ஒரு சிறப்பு தேர்வாக இருக்கும் புதுக்கோட்டை மக்கள் பயன்படுத்திகொள்ளளவும்.

➡️ இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி 1 , குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் 2, குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் 6, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் 6, இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் 2, ஒரு மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

➡️ இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர் சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

➡️ திருநெல்வேலி – சென்னை எழும்பூர் பண்டிகை கால சிறப்பு கட்டண சிறப்பு ரயில் கூடுதலாக தாம்பரம், மாம்பலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு *அக்டோபர் 19 அன்று காலை 8 மணிக்கு* துவங்குகிறது.