விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது

509

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது!


சசிகலா, கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு, ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு பரிந்துரைப்பதாக, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தகவல்.

எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை; தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தகவல்!


சசிகலா வெளியேற்றப்பட்டு 2012-ல் மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்ததிலிருந்து இருவர் இடையே சுமுக உறவு இல்லை; ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் பரபரப்பு தகவல்!


சசிகலாவைக் குற்றம் சாட்டுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது; ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் பரபரப்பு தகவல்!


அமெரிக்காவில் இருந்து வந்த டாக்டர் சமீன் சர்மா, ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்திருந்தார்; ஆனால் அது நடக்கவில்லை என அறிக்கையில் தகவல்


ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கவிடாமல் சசிகலா தடுத்ததாக ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் பரபரப்பு தகவல்!


சசிகலா – ஜெயலலிதா இருவர் இடையே சுமூக உறவு இல்லாததால், சுயலாபத்துக்காக ஜெயலலிதாவுக்கான ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாம்; ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் பரபரப்பு தகவல்!


ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது வெளியான மருத்துவ அறிக்கைகளில் பல்வேறு முரண்பாடுகள் இருந்துள்ளன; ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் தகவல்!


அமெரிக்க மருத்துவர் ஸ்டூவர்ட் ரசல் பரிந்துரைத்தபடியும் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்யப்படவில்லை; ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் பரபரப்பு தகவல்!

ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் உண்மை வெளியாகும் என்பதால் அமளி”!- அமைச்சர் துரைமுருகன்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறந்த நேரம் 5.12.2016 அன்று இரவு 11.30 மணி என மருத்துவமனையால் அறிவிக்கப்பட்டுள்ளது

சாட்சியங்களின் அடிப்படையில் 4.12.2016 அன்று மதியம் 3 மணி முதல் 3.50 மணிக்குள் ஜெயலலிதா இறந்திருக்கலாம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை

டிஸ்சார்ஜ் தொடர்பாக பொய் அறிக்கை!

ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற பொய்யான அறிக்கையை அப்போலோ மருத்துவமனை வெளியிட்டதாக ஆணையம் தகவல்! சட்டப்பேரவையில் தாக்கல் செய்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் இடம் பெற்றுள்ள பரபரப்பு தகவல்