முக்கிய செய்தி :
தேனி மாவட்ட மலை பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால் வைகை அணை 70 அடியை எட்டியதால் உபரி நீர் முழுவதும் வைகை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.. வைகை ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம்..
தேனி மாவட்டம் வைகை அணையின் நீர்மட்டம் இன்று
17.10.2022 6.00 மணி அளவில் 69 அடியை எட்டியதால் மூன்றாம் கட்ட வெள்ள எச்சரிக்கை விடப்பட்டது.
மணி அதன் தொடர்ச்சியாக இன்று 17.10.2022 இரவு 7.00 அளவில் 70 அடியாக உயர்ந்தை தொடர்ந்து அணைக்கு வரும்
உபரிநீர் முழுவதும் வைகை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
திறக்கப்பட்டுள்ள நீரின் அளவு வினாடிக்கு 7000 கனஅடி என்ற வீதத்தில்
உள்ளது.
எனவே பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ,
குளிக்கவோ கூடாது என நீர்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
உதவிசெயற்பொறியாளர், நீவது., வைகை அணை உபகோட்டம்,
வைகை அணை.