தக்காளி மொத்த விற்பனை வியாபாரி ராஜலட்சுமி வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு நடந்த வழக்கில், இருவர் கைது

605

புதுக்கோட்டை போஸ் நகர் தக்காளி வியாபாரி வீட்டில் 80 பவுன் நகைகள் திருட்டில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் சிக்கி உள்ளனர்

இதில் ஒருவர் அடப்பன்வயல் போஸ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது இவர்களிடம் மேல் விசாரணை நடந்து வருகிறது இந்த குற்றவாளிகளில் ஒருவர் மீது ஏற்கனவே பழைய திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது

புதுக்கோட்டை: தக்காளி மொத்த விற்பனை வியாபாரி ராஜலட்சுமி வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு நடந்த வழக்கில், இருவர் கைது

47 சவரன் தங்க நகைகள், ₹35,000 பணம் மீட்பு; திருட்டு நடந்த 5 நாட்களில் குற்றவாளிகளைப் பிடித்த காவலர்களுக்கு மாவட்ட எஸ்.பி. பாராட்டு

இந்த திருட்டு சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா நகைகள் எங்கு வைக்கப்பட்டுள்ளதா அல்லது ஏதாவது விற்பனை செய்யப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் கணேஷ் நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்