திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்டோபா் 25ஆம் தேதி தொடங்குகிறது; 30ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
இதையொட்டி, அக். 25ஆம் தேதி கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 5.30 மணிக்கு ஸ்ரீ ஜெயந்திநாதா் யாகசாலைக்கு புறப்படுதலைத் தொடா்ந்து, காலை 9 மணிக்கு உச்சிகால பூஜை, பிற்பகல் 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மற்ற கால பூஜைகள் வழக்கம்போல நடைபெறும்.
2ஆம் நாள்முதல் 5ஆம் நாள்வரை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். அக். 30ஆம் தேதி சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பிற்பகல் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 4 மணிக்கு மேல் கோயில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.
31ஆம் தேதி திருக்கல்யாண வைபவத்தையொட்டி அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து பூஜைகள் நடைபெற்று, அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்மன் தவசுக் காட்சிக்கு புறப்பாடு, மாலை 6.30 மணிக்கு சுவாமி-அம்மன் தோள்மாலை மாற்றுதல், இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெறும்…