10ம் வகுப்பு அசல் சான்றிதழ் இன்று பள்ளிகளில் பெறலாம்

312

சென்னை: பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், இன்று(அக்.,14) வழங்கப்படுகின்றன.

தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவ – மாணவியருக்கு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஏற்கனவே வழங்கப்பட்டது. இந்நிலையில், துணை தேர்வு முடிவு மற்றும் மறுகூட்டல் முடிவு வெளியான நிலையில், அசல் மதிப்பெண் சான்றிதழ் தயாராகியுள்ளது.

மாணவ – மாணவியர் தாங்கள் படித்த பள்ளிகளில், இன்று காலை 10:00 மணி முதல், தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று கொள்ளலாம். தனி தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில், சான்றிதழ்கள் பெறலாம் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா அறிவித்துள்ளார்.