சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி காசியாபிள்ளை நகரில் வசித்து வருபவர் ராஜசேகரன் எஸ்.புதூர் ஒன்றியம் திருவாழ்ந்தூர் அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியராகவும், இவரது மனைவி தனலெட்சுமி நாகமங்கலம் அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை தனது மகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டு காரைக்குடி மருத்துவமனையில் சேர்த்துள்ளாத மருமகன் இன்று அதிகாலை சுமார் 2.30 மணி அளவில் போனில் தெரிவித்துள்ளார். தகவலறிந்து உடனே கணவன் மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு சுமார் 3 மணி அளவில் காரைக்குடிக்கு சென்று விட்டனர். இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பணம் நகைகளை கொள்ளையடித்து சென்றாக தெரிகிறது.
காலை 8 மணிக்கு மேல் அக்கம் பக்கத்தினர் ஆசிரியரின் வீட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு வீட்டின் உரிமையாளருக்கு போன் செய்து தகவல் தெரிவித்து விட்டு காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். உடனே அங்கு விரைந்து வந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தனர். வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது பீரை உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
வீட்டின் உள்ள புகுந்த மர்ம ஆசாமிகள் பீரோவை உடைத்து அதில் இருந்த சுமார் 30 பவுன் நகை ரொக்கம் ரூ 2 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றதாக தெரிகிறது. மேலும் வேறு ஏதேனும் நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தலைமை ஆசிரியர் தம்பதியினரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அமைதியாக வாழ்ந்து வந்த ஆசிரியர் தம்பதியினரின் வீட்டில் அதிகாலை கொள்ள போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.