பரமந்தூர் – வளத்தகாடு, வெள்ளாற்றில் மேம்பாலம் கட்டும் பணி

380

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா பெருநாவலூர் ஊராட்சி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான பரமந்தூர் – வளத்தகாடு, வெள்ளாற்றில் மேம்பாலம் கட்டும் பணி ₹15 கோடியில் அமலுக்கு வந்த இடத்தை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் திரு ST.ராமச்சந்திரன் ST.Ramachandran MLA அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆவுடையார்கோயில் அருகே பரமந்துார் உள்ளது இந்த பரமந்துாருக்கும் வளத்தகாடு கிராமத்திற்கும் நடுவில் வெள்ளாறு செல்கிறது மேலும் வளத்தகாடு உட்பட அதை சுற்றியுள்ள கிராம மக்கள் மழைகாலத்தில் ஆவுடையார்கோயில் சென்று அறந்தாங்கி வரவேண்டியுள்ளது.

இது குறித்து அறந்தாங்கி எம்எல்ஏ ராமச்சந்திரனிடம் வளத்தகாடு பகுதி உட்பட சுற்றுவட்டார கிராம மக்கள் கோரிக்கை வைத்த நிலையில் நாபர்டு மற்றும் கிராமச்சாலை திட்டத்தின் கீழ் ரூ.19 கோடியில் பாலம் கட்டுவதற்கு அரசு தரப்பில் உத்தரவு வந்த நிலையில் அந்த ஆற்று ப்பகுதியை அறந்தாங்கி எம்எல்ஏ ராமச்சந்திரன் வட்டார தலைவர் முத்து,வக்கீல் விஸ்வநாதன் முன்னிலையில் ஆற்றுப்பகுதியை ஆய்வு செய்து கிராமச்சாலை பொறியாளர் வீரமுத்துவிடம் விபரம் ககேட்டார்.

விரைந்து பணிகள் தொடங்ககோரியும் விரைந்து முடிக்ககோரியும் உத்தரவிட்டார் அவருடன் நிர்வாகிகள் வீராச்சாமி,கிருபாகரன்,தன்ராஜ்,கவுன்சிலர் அஞ்சலிதேவி ஆசிரியர் கேசவன் முரளிதரன் ஆகியோர் உடனிருந்தனர்.