மழை வருது லீவு விடுங்க கலெக்டர் அம்மா.! மழை காரணமாக பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை விடும்படி மாணவர்கள் அனுப்பிய செய்திகளை பகிர்ந்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு
கலெக்டர் அம்மா லீவு விடுங்க உங்களுக்கு கோயில் கட்டுகிறேன் படிச்சு படிச்சு பைத்தியம் பிடிக்குது
மாணவர்களின் குறும்பு தனத்தை ரசித்து முகநூலில் பதிவு செய்த புதுக்கோட்டை கலெக்டர்
கலெக்டர் கவிதா ராமுவுக்கு
இன்ஸ்டாகிராம் இன்பாக்ஸில் வந்து லீவு கேட்டு
மெசேஜ்க்கு மேல் மெசேஜ் அனுப்பிய மாணவர்
படிச்சு படிச்சு பைத்தியம் ஆயிடுச்சு லீவு விடுங்க
அனைத்தையும் தன் முகநூல் பக்கத்தில் பதிந்த கலெக்டர் கவிதா ராமு
புதுக்கோட்டையில் கலெக்டராக இருப்பவர் கவிதாராமு இவர் சமூக வலைத்தளங்களிலும் ஆர்வமாக செயல்பட்டு வருகிறார்அறிவித்தார.
கடந்த சிலர் தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்தது
கடந்த 10ந் தேதி மழையின் காரணமாக மாணவ மாணவிகள் பாதிக்க கூடாது என்பதற்காக புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அறிவித்தார்
வளிமண்டல குறைந்த தாழ்வு அழுத்தம் காரணமாக கடந்த ஒரு வாரமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடக்கோரி அந்த குறும்புக்கார மாணவர் தொடர்ந்து கலெக்டரை எஸ்எம்எஸ் செய்து நச்சரித்து உள்ளார் அதனை கலெக்டர் கவிதா ராமுவும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் டேக் இட் ஈஸி பாலிசியில் மாணவர்களின் குறும்புத்தனத்தை ரசித்து தனது முகநூல் பக்கத்தில் பதிந்துள்ளார்
அந்தக் காலத்தில் பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு பயப்படும் மாணவர்கள் மத்தியில் தற்பொழுது கலெக்டரிடமே லீவு கேட்கும் மாணவர்களின் துணிகர செயல் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் உண்டாக்கி உள்ளது.