காரைக்குடி அருகே விபத்து: மூன்று பேர் உயிரிழப்பு

430

திருச்சி அருகே புதுமனபட்டி கிராமத்திலிருந்து தேவகோட்டைக்கு ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் ஏழு பேர் ஒரு ஆம்னி வேனில் வந்தனர். அந்த வேன் திருச்சி – ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் காரைக்குடி அருகே வரும் பொழுது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த திருச்சியை சேர்ந்த மணிகண்டன், அரவிந்த், ஜெயபால் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்த குன்றக்குடி காவல் நிலையத்தினர் சம்பவம் இடம் வந்து உயிரிழந்த மூன்று பேர்களின் உடல்களை மீட்டு உடற்கூற் ஆய்விற்காக காரைக்குடி தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த நான்கு பேரையும் சிகிச்சைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.