கேரளத்தின் காசர்கோடு மாவட்டம் அனந்தபுரம் ஸ்ரீ அனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில் குளத்தில் வசித்த முதலையாழ்வார்”பபியா”…
கேரளத்தின் காசர்கோடு மாவட்டம் அனந்தபுரம் ஸ்ரீ அனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில் குளத்தில் வசித்த முதலையாழ்வார்”பபியா”…
பூஜை நேரங்களில் குளத்திலிருந்து கோவிலுக்கு வந்து ஸ்வாமியை தரிசித்து விட்டு ப்ரஸாதம் பெற்றுவிட்டு பக்தர்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படுத்தாது அமைதியாக குளத்திற்கு திரும்பிவிடுவார்! என்னதான் குளத்தில் வசித்தாலும் குளத்திலுள்ள மீன்களை உட்கொள்ளாது கோவில் ப்ரஸாதத்தை மட்டுமே உண்டு வாழ்ந்து வந்ததால் இவருக்கு “சைவ முதலை” என்ற மற்றொரு பெயருண்டு…

சைவ முதலை என அனைவராலும் அழைக்கப்படும் அனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி ஆலய முதலை பபியா பகவானின் திருவுள்ள பாங்கின்படி அவர் திருவடியை அடைந்தது,
இதுவரை இந்த குளத்தில் ஏராளமான முதலைகள் வந்தும், போகியும் உள்ளது, முதன்முறையாக முதலையின் உடல் மட்டும் கிடைக்கப்பறுவது இதுவே முதன்முறை,

நித்தமும் உச்சிக்கால வேலையில் பெருமாளின் பிரசாதத்தை உண்டு ஜீவனம் நடத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று இந்த முதலையாழ்வார் உடல்நலக் குறைவால் வைகுந்த ப்ராப்தம் அடைந்தார்
