திருப்பூர் மாவட்ட சப் கலெக்டராக பிரபல நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன்ஜெய் நாராயணன் நியமனம். பணி சிறக்க வாழ்துக்கள் .
இதனையடுத்து அவருக்கு திரையுலகினை சேர்ந்த பலரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் குடிமைப்பணி தேர்வுகள் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது இந்த தேர்வு முடிவுகள் 2020 ஆம் ஆண்டு வெளியான நிலையில், நடிகர் சின்னி ஜெயந்தின் மகனான ஸ்ருதன் ஜெய் நாராயணன் தேசிய அளவில் 75 ஆவது இடத்தை பிடித்தார்.
முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி நேஷனல் அகாடமி ஆப் அட்மினிஸ்ட்ரேஷன் பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. பணி நிறைவடைந்த பிறகு 12 பேர் ஐஏஎஸ் அதிகாரிகளாக தமிழக அரசு பணிக்கு திரும்பிய நிலையில், மத்திய அரசு பணியில் இருந்த ஸ்ருதன் ஜெய் நாராயணன் முதன் முறையாக தூத்துக்குடி பயிற்சி துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
திருப்பூர் மாவட்ட சப் கலெக்டராக பிரபல நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன்ஜெய் நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2020ஆம் வெளியான UPSC தேர்வில் Level இந்திய அளவில் 75ஆம் இடம் பெற்று தேர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.இதையடுத்து ஸ்ருதனுக்கும், அவரது அப்பா சின்னி ஜெயந்துக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. முன்னதாக தான் பணியில் பொறுப்பேற்றதும் கல்வி, வணிகம், மற்றும் பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்த விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார் ஸ்ருதன்.