மூன்று நாட்களுக்கு கனமழை வாய்ப்பு!!!

277

வங்கக்கடல் தமிழகம் அருகே உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியால் இன்று முதல் உள் மாவட்டங்களில் இடிமழை அதிகரிக்கும். நாளை முதல் மேலும் அதிகரிக்கும்.
கடலோர மாவட்டங்களிலும் இடிமழை அதிகரிக்கும்.

மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் ஒரிரு வாரங்களுக்கு பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்கு பருவமழைக்கு முந்தைய இடிமழை தொடரும்.


மேற்கு காற்று வீசும் பகுதிகள் உள்பட வட உள் மாவட்டங்கள், மேற்கு உள் மாவட்டங்கள், தென் உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், மத்திய உள் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் இடிமழைக்கும் ஆங்காங்கே கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

மற்ற கடலோர மாவட்டங்களிலும் ஆங்காங்கே பல பகுதிகளில் இடிமழைக்கு வாய்ப்பு உள்ளது.