ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாத கால சிறை அல்லது ₨5,000 அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்
சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு ₨5 லட்சம் அபராதம் அல்லது ஓராண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.
ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தால் விதிக்கப்படும் தண்டனைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது
ஆன்லைன் சூதாட்டத்தடை அவசரச் சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் ஆன்லைனில் சூதாட்டம் நடத்தும் விளையாட்டுகளுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்படும். அவசரச் சட்டத்திற்கு அக்.1ம் தேதியே ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இது தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 17ம் தேதி கூடவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிரந்தர தடைச் சட்டம் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.