திருமலையில் பக்தர்கள் கூட்டம்

265

இன்று திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது

– ஸ்ரீவாரி தரிசனத்துக்கு 30 மணி நேரம்

இன்று மாலை நிலவரம் திருமலை திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு வருவோர் 30 மணி நேரம் ஆகும் சுவாமி தரிசனம் செய்ய…

– குடோன். கியூ வரிசையில் செல்லும் பாதைகள் முழுவதும் பக்தர்கள் கூட்டம்

தொடர் விடுமுறையுடன் புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையும் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.

அக்டோபர் 4ம் தேதி வரை இயல்பாக இருந்த பக்தர்கள் கூட்டம், 5ம் தேதி பிற்பகலில் இருந்து படிப்படியாக அதிகரித்தது.

வைகுந்தம் கியூ வளாகம்-2, நாராயணகிரி தோட்டத்தில் உள்ள அனைத்து கொட்டகைகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த வரிசைகள் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சீலா தோரணத்தை அடைந்தன.

பக்தர்கள் திருமலை தரிசனம் செய்ய சுமார் 30 மணி நேரம் ஆகும். இதனால் பக்தர்கள் பொறுமை காத்து ஒத்துழைக்குமாறு TTD கேட்டுக்கொள்கிறது..!!